ஏவர் தந்த சாபமோ
மணமேடையில்
மனச்சாட்சியைத்
தொலைத்தவளாய் அமர்ந்தேன்
மணவாளனாய் வந்தவனும்
மனச்சாட்சியை தொலைத்ததனால்
துடித்து நிற்கிறேன்
நெருங்கமுடியா புழுவாய்
தாலி ஏற்றி வந்தவனே
வேலி போட்டதனால்
தவித்து நிற்கிறேன்
கடல் அளவு
சோகம் இருந்தாலும் நான்
அவனை என் அதிகாரக் கரங்களால்
சிறைப்படுத்தி
ஆட்சி செய்ய விரும்பவில்லை
என்னவனாய் வந்தவன்
எதிர்கட்சி ஆனதால் என்
குடும்ப சாம்ராஜ்ஜமும்
சாய்ந்து நிற்குது
சாய் கோபுரமாய்
அணைக்க வந்தவன்
அனலாக மாறியதுடன்
விண்ணப்பம் கூறுகிறான்
என்னிடமிருந்து விடுதலைக்காக
கனத்த இதயத்துடன்
உணர்வற்ற ஜீவனாய்
சம்மதித்தேன் விவாகரத்துக்கு
ஆழந்த அமைதிக்கு பின்
என்னோடு ஒட்டிக்கொண்டது
கண்ணீர் மட்டுமே.
nice one
ReplyDeletethx.
ReplyDelete