அம்மா
நான் எழுதிய கவிதையை
படித்தபோது நீ சொன்னாய்
உன் ககவிதைகளை
புரிந்து கொள்ளுமளவு நான்
படிக்கவில்லை என்று.
அடி அம்மா
உணக்கு தெரியாது நான்
கவிதை எழுதக் கற்றுக்கொண்டதே
உன்னிடமிருந்து தான் என்று.
கல்வியை மட்டும் நீ
எனக்கு கற்றுத்தரவில்லை
பஞ்சங்களை சமாளிக்கும்
தந்திரங்களையும் கற்றுத்தந்தாய்.
அதனால் தான் நான்
தண்ணீர்த் தெப்பத்திலும்
தாமரையிலையாய் இருக்கின்றேன்.
சிறு வயதில் நீ கூறிய
பேய்க்கதைகளும்
ஒரு வகையில் நல்லதுதான்.
இப்போதெல்லாம்
என்பாதையில் வரும்
பயங்கர நபர்களையும்
பரிசயபமணவர்களாக பார்க்க முடிகிறது.
இன்னும் என்னை
சிறுபிள்ளையென்று நினைத்து
பயமுறுத்தி சோறூட்டுகிறாய்.
நான் சாப்பிட வேண்டும் என்பதற்காய்
நீ பயமுறுத்துகிறாய்.
வெளியில் இனம் தெரியா
பயங்கள் என்னை சாப்பிடுகின்றன.
அடம் பிடிக்காதே அம்மா
நான் பெரியவளாகி விட்டேன்.
உன் கை பிடித்து
நடைபழக்கினாய் எனக்கு
உன் கைகளைப்பிடிக்காமல்
நான் நடந்து விட்ட
தூரத்தைப் பார்த்தாவது
நம்பு அம்மா
நான் சிறு பிள்ளையல்ல.




Colombo Time


No comments:
Post a Comment