
கொடூர நிலை கண்டு
கதி கலங்கிப் போனாள்
வீட்டாரின்
வாய் வார்த்தைகள் அவளை
நான் காயப்படுவதாக
உணரச்செய்தது
ஊர் உறவுகளின்
வார்த்தைகளைக் கொண்டு
வீட்டில் எனக்கு
சிறைக்கூடம் செய்தனர்
சிறைக்குள் சீதையாம்
பூட்டுக்கள் எப்படி புனிதமாகலாம்
இன்றும் நீ சிந்திக்கத்தெரியா
சிறு பிள்ளையல்ல
மனம் எனும் தோழி
வரையறை வரம்பை வெட்டிவிடுகிறாள்
காயப்பட்ட என் மனதும்
ஏற்றுக்கொள்ளும் எண்ணமில்லை
காலங்கள் உன்னை மேடையேற்றியது
சடங்கு என்னும் நாடகத்தில் நீ
திறமையாகவே நடித்தாய்
போதும் இனி உன்
மெணங்கள் மரணிக்கட்டும்
தோழியின் வார்த்தைகள் .
உனக்காகவும் உன் உறவுகளுக்காகவும்
எதிரே வருவதை
ஒதுக்கி ஒடுங்கி விடு
ஓங்கி விடாதே என்றாள் தோழி
வார்த்தைகள் வேலி போட்டன
கற்பு பெண்களுக்கு மட்டும் தானாம்
விரிந்தது விழி
விழிகளுக்கு கட்டுப்போட்டனர்
திறமையாக நடிக்கத்தெரியும் என
பெயர் வாங்கிய நான்
சிறு சிறு தவறுகள் விடுவதில்
ஆர்ச்சரியப்பட இல்லையே
என்னை சுற்றி உள்ளவர்களின்
முடமாககும் முயற்சியில் நான்
பலமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை
நினைத்தால்
பரிதாபம் தான்
அவர்களின் நிலை
No comments:
Post a Comment