Social Icons

பாழ்மனது

பின்சாமத்தில்
கூட்டிச்சென்று எங்கோ
நடுக்காட்டில் விட்டு வர
அதிகாலையில் வீட்டுவாசலில்
சுருண்டு படுத்திருக்கும்
நாய்க்குட்டியைப்போல
எத்தனை மடைமாற்றினாலும்
தடமறிந்து திரும்பிவந்து
உன் நினைவுகளின் கதகதப்பில்
ஒடுங்கி படுத்துக்கொள்கிறது
வேறு போக்கிடமற்ற

பாழ்மனது.

எனது ஞாபகம்

சிறு வயதில் என் 
ஞாபக சக்தி குறித்து 
எனக்கு 
ரொம்பத்தான் பெருமை 
வைத்த பொருளை 
கிடைக்காமல் தேடுகையில்
சின்னவளுக்கு தான் 
ஞாபகமிருக்கும் என 
என்னை அழைக்கையிலும் 
நான் கண்டெடுத்து 
தருகையில் எனக்குள் 
ஒரு பூரிப்பு

சிலரின் பிரிவு 
என்னால் தான் என்ற 
வார்த்தைகள் 
காதலனின் மரணம் 
சொந்த வீட்டின் அழிவு 
ஒவ்வொன்றும் 
அச்சில் வார்த்தது போல் 
ஞாபகங்கள் 
இன்றும் தானிருக்கின்றது 
ஏனோ என் 
ஞாபகசக்தி குறித்து 
இன்று துக்கப்பட தான்
வேண்டியிருக்கின்றது

‪சுG

குப்பையில் போடு

ஏராளம் சிந்தித்து 
எழுதித்தருவேன் 
அலட்சியமாய் வாசித்து 
இன்னும் ஆழமாய் 
எழுதச்சொல்வாய் 
மூளையை கசக்கி 
எழுதிய மொத்தத்தையும் 
குப்பையில் போட்டு கோவமாய் 
உன்னிடம் வருவேன் 
வெறும் 
வெள்ளைக்காகிதத்தை 
ஆர்வமாய் வாங்கிப்பார்த்து 
நானெழுதாத கவிதையை 
நீ எழுதுவாய் ஒரு 
மௌனப் புன்னகையால் 



உனக்காக

மனம் என்னும் 
மணமேடையில் 
காத்திருக்கிறேன் அதே 
மணக்கோலத்துடன் 
உனக்காக 

சுG

இருட்டில் நான்


என் உலகமே

விழித்திருக்கும்

நடுவிலும் 

நான்

இருட்டில் நின்றிருப்பேன்.

கண்களால் ஓடுது

ரத்தமாய்தான்

இருக்கவேண்டும்

இதமாய் சுடுகின்றது.

விக்கி விக்கி அழ 

மூச்சுமுட்டி 

தொண்டை அடைக்க 

பெரிதாக கத்திவிடுவேனோ

என்ற பயம் வேற

என்ன சொல்ல 

என் பயத்தை.

Welcome Graphic #94