எவர் தந்த சாபமோ
சாக்கடையில் விழுந்ததனால்
கண்களை குத்திக்கொண்டேன்
என் விரல்களாலே
ஆனாலும்
கண்களை
ஆந்தைகளிடம் கடன் வாங்கி
அயராது விடியலை நோக்கிலும்
என்ன செய்ய
ஆந்தைகளின் கண்களால்
சூரியன் காணாமல் போனது
தேடிக்கொண்டே இருக்கிறேன்
கிழக்கை
விடியலை ரசிக்கும் யோகம்
எனக்கு இல்லாமலே போனது.
No comments:
Post a Comment