
இளம் மொட்டுக்களாய்
வேதனையை சுமந்து
வரும் கருவண்டுகளாய்
நிசப்தமாண நிசிப்பொழுதினையும்
நீளமாக்கும் நினைவுகளுடன்
ஏமாற்றங்கள் அத்தனையும்
நிறைவேறும் எனும்
எதிர்பார்ப்புக்களுடனும்
தினம் தோறும்
ஒன்று கூடும் வட்டாரங்கள்
உயரத்தில் இருந்து கொண்டு
அவனைப் பார்த்து
சிரிக்கும் சிகரங்களையும்
இலகுவில் தொட்டுவிடும்
மானிடனிவன் (டினுசன்)
வானத்தில்
வண்ணமாய் ஜொலித்திடும்
அந்த நட்சத்திரக் கூட்டத்தோடு
நடந்து கொண்டு கதைபேசும்
காவலன் மற்ரொருவன் (றெஜி)
சுட்டெரிக்கும் சூரியனும்
சுற்றிக்கொண்டிருக்கும் கோல்களும்
வரிசையில் வந்து நிற்கும்
வார்த்தைகள் இவளிடம் தான் (சாலி)
உறுதியாய் அவள் வாழ
உடன் பிறப்புக்களோ
பல மைல்கட்கு அப்பால்
தமிழ் தாயை வணங்கியதாலோ
இந்நிலை (துளசி)
சாதனைகள் பல சமைப்பதற்கு
சீர்கெட்ட வாழ்வே பல
இப்பூமியில் மங்கயர்க்கு என
சீறி வாழ்வாள் (துவா)
அழகாண வேளையைக் கூட்டி வர
சிநேகிதப் பூக்களோடு
உறவுகள் வேர்விட்டு ஓங்கி நிற்க
ஊஞ்சலி;டுவாள் (கம்சா)
புத்தகங்களின் பக்கங்களை புரட்ட
வீறுகொண்டு புறப்படுவாள் (சுதா)
சட்டென்ற பேச்சில்
சில்லென்ற கோவம்
புத்தக பக்கங்களை
வேகமாக புரட்டும்
புரியாத புதிர் (கௌசி)
வங்களா வெடியிலிருந்து
வானொலியில் சாதனை படைக்க
அண்ணன் வாங்கி கொடுத்த வாகனத்தில்
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
கூட்டி வருவாள் (சிந்து)
பார்வைக்கு சிறுமி
மெல்லிய மனதும்
அர்த்தமில்லாத பேச்சும் என
வலம் வருவாள் (சுகிர்தினி)
அமைதியாண பேச்சு
திமிராண பார்வை
அழகான குரல்
ஆழ்கடல்தான் இவள் (பவித்திரா)
தேவையற்ற பயம்
திமிராண குணம்
பல உள்ளக்குமுறல்கள்;
ஆயிரம் கற்பனைகளை
பறக்க விட்டபடி பறந்து வருவான் (நிறோஸன்)
இடையில் வந்தவன் தான்
இருந்தாலும்
ஏதோ பாசம்
எம் வானொலியின்
அபிமான நேயர் வரிசையில்
முதல் இடம் பிடித்தவன் (பிரசாந்)
மூன்று மாதத்தில் இணைந்த
அன்பாண உறவுகள்
நன்றாக உள்ளது. அன்பான உறவு பிரிந்தால் மனம் காயப்படும்.
ReplyDelete