Social Icons

நினைத்துப் பார்க்கா ஒரு நிமிடம்




அப்போஅறியா
வயசுசுயமா சிந்திக்கக்கூடத் தெரியாது
மாமன் மகனை மணமுடிக்க
மணமேடையில் மணமகளாய் அமர்ந்தேன்.
வந்தவர்கள் வாழ்த்தி விட்டு
வழக்கம் போல் விடைபெற்றனர்.
மறுநாள் வீட்டில் ஏதோ
விசேஷம் மாதிரித்தான் இருந்தது.
அறியா வயசல்லவா
அழக்கூடத் தோணலை
பந்தல் போட்டார்கள்,
தோறணம் கட்டினார்கள்,
வாழை நாட்டினார்கள்,
தேவாரம் கூடபாடினார்கள்,
ஊரே வந்தார்கள் ஆனால்
சொல்லாமலே வந்தார்கள்
ஒரு நாளும் வராத சொந்தங்கள்
சிலரும் வந்தார்கள்
மாற்ரோரும் வந்தார்கள் ஆனால்
மாமன் மகன் மட்டும்
எவ்வித சலனமும் இல்லாமல்
சயனித்திருந்தான்.
மாமாவிடம் சால்வையைக் கொடுத்து
வேட்டியாக கட்ட சொன்னார்கள்
எதுவுமே புரியலை எனக்கு
கடவுளைக் கேட்டேன்
என்ன இது என்று
மெதுவாகப்புரிந்தது
ஏன் கடவுளே உன்னால் முடியாதா
நீ நினைத்தால்
என் கணவனைத்திருப்பித்தர.
அவனருகில் போகக் கூடத் தோணலை
கடைசியாக பார்க்கணும்
என்று கூடத் தோணலை
ஏன் எனக்கு அழக்கூடத் தோணலை
அழுறவங்கள பாக்க
வெறுப்பாய்தான் இருந்தது
ஏன் அழனும்
சத்தியமா எனக்கு இப்பவும் புரியலை
குளிக்க வைத்து,
பொட்டிட்டு,
உணவூட்டி,
பால் குடிக்க கொடுத்து  
பெட்டியை மூடி 
புறப்பட்டார்கள்.
இன்னும் சில நினைவுகள்

அப்போ தெரியவில்லை
என்னென்ன நடந்ததென்று
போகப் போக புரிந்தது
என்னவன் நிதந்தரமாய்
போய் விட்டான் என்று
அன்று அழாததை இன்று
பல இரவுகளில் அழுது கொள்கிறேன்
ஒரு விதவையாக
தனிமையில் நின்று.
இனி எப்போது கேட்பேன்
என்டைக்கு இருந்தாலும்
உன்னை நான் தானே கட்டுவன்
என்ற வார்த்தையை………..

No comments:

Post a Comment

Welcome Graphic #94