அன்பு நிறைந்த
அழகான ஆலயம்
என் வீடு
கேட்பதற்கு மறுப்புக்கூறாத
அன்பு என் அப்பா
ஆலயத்தின் ஆணிவேரான
ஆசை என் அம்மா
அசையாத
வைராக்கியம் படைத்த
கனவு என் அண்ணா
பல விடயங்களை
பார்வையால் தீர்க்கும்
பாசம் என் அக்கா
பரம்பரையாக இருந்து வரும்
சீதனம்
இவர்களது குணாதிசயம்.
No comments:
Post a Comment