நமக்கே தெரியாமல் நம்
உறவுகள் இருவருக்கும்
பரிசம் போட்டது
கடல் கடந்து நீ
சென்றாய் கைகாட்டி
அனுப்பிவைத்தேன்
உன்வரகவ்காய் நான்
ஏங்கவில்லை
காரணம் வயது
பன்னிரண்டு
உன் முகம் கூட
ஞாபகமில்லை
நாட்கள் விரைந்தோட
வயதும் பதினெட்டானது
கைத் தொலைபேசியில்
சேதி கதவைத் தட்டியது
வீட்டில் அனைவரது
முகமும் அமாவாசையானது
சொன்னால் போல
நாட் காட்டியும்
அன்று அமாவாசையைக்
காட்டியது
பள்ளி புறப்பட்ட என்னை
நிறுத்தி பயணம் பறப்படு
என்றனர்
காரணம் கேட்டுப்
பழக்கமில்லை
புறப்பட்டேன் கடல் கடந்து
.jpg)
வீட்டு முற்றத்தில்
பதிந்த பந்தல்
குருக்களின் மந்திர
முழக்கம்
சாம்பிராணி
வாசம்
காற்றோடு கலந்து வர
காரணமின்றி அழுகையும் வந்தது
பதிந்த பந்தலுக்குள்
சிறிய வெள்ளை வேட்டிப் பந்தல்
வெள்ளை ஆடை அணிந்த
ஆண்கள் இரு பக்கமும்
கப்பல் கவிழ்ந்தால் போல்
தலையில் கை வைத்தபடி
இவற்றுக் கெல்லாம் மேலாக
நூட்டு மேளத்தினையும் மீறி
பெண்களின் அலறல்
உள்ளே போனதும்
அறுவது வயது
பெண் ஓடி வந்து
கட்டியனைத்தாள்
வாய் எல்லையற்று உளறியது
என்னைப்பெத்த மகராசி
வந்தாண்டி எருமை
வாகனத்தில
பசிக்குது எண்டு நினைச்சான் போல
பறிச்சிட்டுப் போயிட்டாண்டி
சட்டென்று என்னுடல் நடுங்கியது
தலையில் கைவைத்தபடி
முகம் மாட்ட மறுத்து
உட்காந்தேன் மூளையில்
எல்லாக் காரியமும்
முடிந்தது
ஜயர் சட்டென்று
பறப்பட்டார்
பெட்டியை மூடினர் நால்வர்
பிணம் புறப்பட்டது
சுடுகாட்டுக்கு நடை
பவணியாக
சட்டென்று என் கையும்
பிடிபட்டது
பெண் என்றனர் பலர்
கடசி ஆசை என்றனர் சிலர்
தாய் தலையசைக்க
நடந்தேன் தந்தையுடன்
கையில் பந்தம் தந்து
பத்தவைச்சு பார்க்காமல்
போ என்றனர் பெரியோர்
யோசனை எதுவுமின்றி
அடுத்தடுத்த ஆசைகள்
அடுக்கடுக்காய் நிறைவேற
வீட்டுக்கு வந்தேன்
தோரணங்கள்
நிலத்தில் முத்தமிட்டுக்
கொண்டிருந்தேன்
வீட்டிற்குள் வா
என்றனர் பொட்டழித்து
பூஎடுக்க காப்பு
உடைபட்டது தன் பாட்டில்
பாட்டிமார் போய் வாறன்
என்றனர்.
முகம் காட்ட மறுத்து
கை காட்டி அனுப்பி
வைத்தேன்
இருந்த அலுப்பில் சற்று
உறங்கிவிட்டேன் போல
அதிகாலை எழுந்தேன்
அடுப்பெதுவும் எரியவில்லை
அயல் வீட்டுத்தேனீர்
இதமாக இருந்தது
சாம்பல் அள்ளப் போனவங்க
சட்டென்று வந்தாங்க
நேற்று
நடந்ததெல்லாம்
கனவு போல்
இருந்தது
தினத் தந்தி வந்தது
ஆசையாக எடுத்து
புரட்டினேன்
அதிர்ச்சியாண
சம்பவம் கண்ணில்
தென்பட்டது
ரயில் குண்டு
வெடிப்பில் நாற்பது பேர் பலி
என்றிருந்தது
அடுத்த பக்கம்
புரட்டினேன்
அழகபண புகைப்படத்துடன்
கண்ணீர் அஞ்சலி
காணப்பட்டது
பார்த்த முகம் போல்
ஒரு புகைப்படம்
ஆவலாக பார்த்தேன
கீழே மனைவி
என்று என் பெயர்
இருந்தது
அப்போதுதான் புரிந்தது
நேற்று நடந்த மரணச்
சடங்கு
என்னவனின் இறுதிச் சடங்கு
என்று
வெட்கமாய் இருந்தது
வீட்டை விட்டு வெளியே
வந்தேன்
விதவை என்றது ஊர்
இடைவெளி
எதுவுமின்றி
விடைபெற்றேன் பிறந்த
நாட்டுக்கு
நடந்ததை உறவும்
மறைத்தது நானும்
நடித்தேன்
மறுபடியும் உறவெல்லாம்
ஒன்று கூடியது
வயதும் இருபத்தி
இரண்டானது
திருமணம் செய்வாயா என்றது
இளம் புன்னகையுடன்
அடைக்கப்பட்ட இருட்டறைக்குள்
வந்து சற்று யோசித்தேன்
கடிகாரம்
நள்ளிரவு
பன்னிரண்டு மணியைக் காட்டியது
வீட்டை விட்டு வெளியே வந்து
கிணற்றை எட்டிப் பார்த்து
நிலவைப் பார்த்தபடி குதித்தேன்
விழுந்தேன்........கட்டிலில் இருந்து கீழே
கனவு என்று
தெரிந்தும் அழுதேன் சிறிது நேரம்.
புதுக்கவிதையின் ஒரு முழுப் பொலிவு வடிவம் 2 தரம் வாசிச்சிட்டேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்றி சகோ....... இந்த கவிதை எழுதியதற்கு பலரிட்ட பேச்சு வாங்கினன் ஒரு தோழியிட்ட அடியும் வாங்கிற்றன்
Deleteநாம் செய்வது சரி என்றால் மற்றவர் கணிப்பு எமக்கெதற்கு... தோழி....
ReplyDeleteஉங்களது தளத்தில் உள்ள வேட் வெரிபிக்கேசனை நீக்கியருள முடியுமா
கருத்திட சிரமமாக உள்ளது (அதை நீக்கினால் registred user மட்டும் கருத்திடும் வகையில் மாற்ற மறக்க வேண்டாம்)