என்னைத் தொலைத்து உணக்காக
எழுதித் தொலைத்த எத்தனையோ
கவிதையுண்டு அத்தனைக்கும்
பதிலில்லை..
உன்னவன் இறப்பினும் இரங்காத
மனம் உணக்கு இன்றும் ஒரு
கவிதையுண்டு இது கவிதையல்ல..
என் இமைக் கதவை திறக்கையில்
ஏமாற்றமும் கவித்துவமும் சந்தித்துக்
கொள்ளும் அதில் கவித்துவம் வென்று
கற்பனையை காணிக்கையாக்கும்..
தன் அறை ஒன்றை இரவல் எடுக்கும்..
வாய்த்தீனிக்கும் வட்டமிடும் பேயாய்
உன் மௌணம் என் தூக்கம் விழுங்கும்..
கட்டிலை விட்டெழுந்து கால்கள்
நடக்கத் தொடங்கும்...
என் இதய அறையில் உன்
குடியிருப்பிலிருந்து என்
பார்வையில் உன் அசைவுகள்
அத்தனைக்கும் என் கண்கள்
கணக்கு வைத்திருக்கும்!!
No comments:
Post a Comment