நண்பனின் மனதில்
நட்பு மட்டும் தான்
உள்ளதென்று
புரியாமல் போக
அந்த நண்பனுடன்
பலநாள்
நண்பியாக பேசியிருப்பேன்
என் மனதில்
நட்பு மட்டும் தான் உண்டென்று
உலகுக்கு சொன்னால்
உலகம் நம்பும் என்றால்
நீதிமன்றம் தேவையில்லை எனக்கு
பட்டமரம் பூப்பதுமில்லை
பொய்ப்பூ பொருந்துவதுமில்லை
பூ ஒன்றை பறித்து
பட்ட மரத்தின் மேல் வைத்தால்
பலருக்கு பதில் சொல்லும்
பாவியாவேன் நான்
No comments:
Post a Comment