உறவுகள் கூடியிருக்கும்
அத்தருணத்தில்
உணர்வற்றிருக்கும் என் மனம்
ஓராயிரம் கதை உறவுகள் சொல்ல
ஒரு வரி கூட புரியாமல் நானிருக்க
திடீரென
கேள்வி கேட்க
விடை தெரிந்தும் வழி பிதுங்க
என் முகம் வேர்க்கும்
உறவு கேட்கும்
எவன் நினைவில்
நீ உள்ளாய் என்று
யாருக்குச் சொல்ல
என் உணர்வுகள் இறந்தும்
உயிர் வாழ்கிறேன் என்று
No comments:
Post a Comment