ஏராளம் சிந்தித்து எழுதித்தருவேன் அலட்சியமாய் வாசித்து இன்னும் ஆழமாய் எழுதச்சொல்வாய் மூளையை கசக்கி எழுதிய மொத்தத்தையும் குப்பையில் போட்டு கோவமாய் உன்னிடம் வருவேன் வெறும் வெள்ளைக்காகிதத்தை ஆர்வமாய் வாங்கிப்பார்த்து நானெழுதாத கவிதையை நீ எழுதுவாய் ஒரு மௌனப் புன்னகையால்
No comments:
Post a Comment