பிற்பாடு எது சொல்
காதலில் பிரிவா? மரணமா?
ஏதோ ஓர் பிடிவாதத்தில்
காதல் பிரிந்தது
விதி முடிந்ததால்
மரணம் நேர்ந்தது
எதிர் பாரா சந்திப்பில்
பிரிவின் வேகம் அதிகரிக்கின்றது
ஒரு முறையாவது
பார்த்து விட துடிக்கிறது
மரணம்
பிரிவில் முதல் வேலை
ஏதோ ஒரு வித அழிவு
மரணத்தின் முதல் வேலை
தனியே பயணிக்கும் தன்னம்பிக்கை
பிரிவில் அதிகரிக்கின்றது
பாசம் அல்லது கோவம்
மரணத்தில் அதிகரிக்கின்றது
வெறுப்பு அல்லது பிடிவாதம்
பிரமாண்டமானது பிரிவு
பிரபஞ்சமற்றது மரணம்
பிரபஞ்சம் போலவே
முடிவிலியானது மரணம்
இப்போது சொல்
எது பெரிது
காதலில் பிரிவா? மரணமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment