சிந்தனை கொண்டு
சில்வண்டுகளாய்
பறந்து வந்தோம்
MRTC இல் ஒரு குடியிருப்பு
பலகோடி இன்பமுன்டு
சிலகோடி துன்பமுன்டு
சில்வண்டுகள் போல் சிலர் சிரித்துவர
பலர் சோர்ந்துவர
சோகமெல்லாம் ஓடிவிடும்
காலை வணக்கம் சொல்வதிலே
காலைத்தூக்கம்
துக்கமாய் வதைக்கும் அனைவருக்கும்
பஸ்சுடன் போராடும் தூரப்பயணம்
சைக்கிலில் மாறடிக்கும்
மறு பயணம்
அதுக்காக ஓட்டோவா பிடிக்கமுடியும்
பஸ்ஸில் ஏறி
பாதைகள் பார்க்க விருப்பமில்லை
விருப்பமான பாட்டு கேட்க முடியாது
போட்ட பாடடைக் கேழ்
தூக்கம் கண்களைத்தழுவ
வாத்தியார்
நீங்க எல்லாம் ஏன் தான்
வாறியளோ தெரியாது
அதிலும் ஒரு சுகம்தான்
நமக்குள் பெரிய வாளி
யார் என்பதில்
சந்தேகமே இல்லை
எல்லாரும் உளறுவாய் தான்
சும்மா சொல்லக்கூடாது
தோள் கொடுக்கும்
தோளர்கள் இவர்கள்
செமிஸ்ரர் மட்டுமல்ல
அசைமன்ர கூட
கதிகலக்கும் எமக்கு
இதனால் யாழ் TOWNL
எம்மைத் தெரியாதோர்
குறைவாகத்தான் இருக்கும்
இரை தேடிய ஆண்டுகள்
இரண்டே ஆனாலும்
முதல் சந்திப்பை
மறந்ததில்லை எவரும்
சோடி வண்டுகள் என்று
எதுவும் இல்லை
வதைக்கும் வண்டுகள் எக்கச்சக்கம்
வதையின் வகையும் எக்கச்சக்கம்
காமடி வண்டுகளுக்கும் அளவில்லை
குசும்பு வண்டுகளுக்கும் குறைவில்லை
சைக்கில் கடையில்
ஏராளமான கடனும்
தம்பி கடையில்
அளவான சாப்பாடும்
லிங்கத்துக்கு மிக்சர் தின வருமானமும்
மிக்சர் வாங்கின காச
வங்கியில போட்டிருந்தாலும்
வட்டி வளர்ந்திருக்கும்
தோல்வியிலும் சரி
வெற்றியிலும் சரி
உள்ளங்கை தட்டி
தட்டிக்கொடுக்கும் உறவு
இனி எங்கும் கிடைக்காது
வெளிச்சத்தில வீட்ட பார்த்து
றொம்பநாளா போச்சு
இத்தனை இன்பமும்
அனுபவித்து விட்டோம்
MRTC சிறையில்
தன்மானத்துடன் தலைநிமிர்ந்து
வேலை தேடலாம்
கல்யாணப்பத்திரிகைகள்
காத்திருக்கின்றன
நண்பர்கள் நாம்
ஒன்று சேர
கவிதை வரைய தெரியாது
கூடி இருந்த நட்பின் வலியில்
ஏதோ கிறுக்கி விட்டேன்
வார்த்தையில் வைரமில்லை
வையிடாதீர் யாரும்
No comments:
Post a Comment