Social Icons

பரிதாபம் தான்

என் தோழி என் 
கொடுர நிலை கண்டு 
கதி கலங்கிப் போனாள் 
ஊரார் உறவுகளின் 
வார்த்தைகளைக் கொண்டு 
வீட்டில் எனக்கு 
சிறைக்கூடம் செய்தனர் 
சிறைக்குள் சீதையாம் 
பூட்டுக்கள் எப்படி 
புனிதமாகலாம் 
என்னைக் காயப்படுத்துமென 
வார்த்தைகளை வீசினர் 
விரிந்தது விழி 
விழிகளுக்கு கட்டுப்போட்டனர்
அவர்களின் 
முடமாக்கும் முயற்சியில் நான் 
பலமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தால் 
பரிதாபம் தான் 
அவர்களின் நிலை

No comments:

Post a Comment

Welcome Graphic #94