Social Icons

அப்ப பாருங்களன்

என்னை 
பெண் பார்க்க வந்தவர்களிடம் 
சட்டென்று சொல்லி விட்டேன் 
ஏற்கனவே எனக்கு 
மணமாகி விட்டதென்று 
அப்போ நீ 
விதவையா என்றனர் 
இல்லை நான் 
அதிஸ்ரமில்லாதவள் என்றேன் 
வளக்கமான பல்லவியாக 
புறோக்கரிடம் சொல்லி அனுப்புகிறோம் 
என்று புறப்பட்டனர் 
மணமானது இரு 
மனங்களுக்கும் என்று 
எங்க சொல்ல விட்டினம் 
நான் ஆணாக பிறந்திருந்தால் 
மதுப்போத்தலை கையில் ஏந்தி 
முகத்தில் தாடியை படர விட்டு 
நாலைஞ்சு காதல் கவிதை எழுதி 
முகப்புப்புத்தகத்தில் போட்டிருப்பன் 
அதற்கும் அதிஸ்ரம் 
என் பக்கம் இல்லை 
அப்ப பாருங்களன் 

2 comments:

  1. ஹையோ ஹையோ!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....சூப்பர் கவிதை மிஸ் சுஜி ..:)

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அனுபவத்துடன் சேர்ந்த கற்பனை தான் வடிவேல் மதுசன். மனம் நிறைந்த அன்புகள்.

      Delete

Welcome Graphic #94