முட்கள் வளர்ந்த
பாதை மேல்
பயணம் செய்கிறேன்- நான்
எனக்குள்ளும்
பல விதமான கனவுகள்
புதுவிதமாய் குடியிருக்க
இடையிடையே
மர்மமாய் திகிலூட்ட
அதிர்தலுறும் மனதை
இறுகப் பிடித்தபடி
பாதையை சுத்தமாக்கி
பின்னே செல்கிறேன் பல
வழிகளில் பிரிகிறது
நான் போகும் பாதை
ஆனால் என்ன எனக்கு
நேர்வழியை விட்டால்
வேறு வழியும் தெரியாது
திரும்பி வரவும் முடியாது
எனது பாதை
மேடு பள்ளம் அல்ல
குளம் கரை போன்றது
காற்றில் அலைந்து திரியும்
வேறு ஆசைகளும்
மனசதைப்பறித்திட
என் மனசும் மறு புறமாய்
நிம்மதியில் லயிக்கிறது
இறைவனின்
ஏற்பாடோ தெரியவில்லை
ஏதோ சேதியொன்று
செவிகளிலே ஒலிக்கிறது
யார் என்று கேட்டால்
என்ன பதிலைக்கூற நான்
ஏன் இந்தப்பாரா முகம்!!





Colombo Time


No comments:
Post a Comment