Social Icons

சேதி சொல்லும் பேனாக்கள்................


புதுப்பட்டம் பெற
பதினைந்து நாள் புதிய பயணம்

ஏதோ எம்முன்னிலையில்
சீர் கெட்டுக்கிடக்கும்
சமுதாயத்தினை சீராக்க
உறுதியான உள்ளம் கொண்ட
ஊடக மாணவர்களது
இலட்சியப்பாதை

படிக்க அனுப்பியவர்கள்
புத்தி சொல்லி வழியனுப்ப
செல்லமாகச் சொல்லுகிறேன்
திருந்தி விடுங்கள்
என்ற ஆசிரியரின்
அன்பான கண்டிப்புடன்
பலரை பொறாமை கொள்ள வைக்கும்
தலைநகரம் நோக்கிய
தனி பஸ்ஸில்
அரை நாள் பயணம்

அலுப்பாகிப் போனது அனைவருக்கும்
இதுதான் ஆரம்பம் என்று
புரியாமல் போனது மாணவர்களுக்கு

விடி வெள்ளி மறையாத காலை
விழி தூங்க முடியாத கனவு
ஏராளமான எதிர்பார்ப்புடன்
பல மாணவர்களுக்கு
முதல் விமானப்பயணம்

ஏதேதோ எதிர்பார்த்த படி
மிதந்து வரும் கற்பனைகள்
வட்டமிட்டு அவாவைத்தொடரும்
எம் பார்வைகள் ஒன்றை ஒன்று
தொட்டு மீள்கையில்
விமானம் நிறுத்தப்பட்டது
இந்திய மண் மிதந்ததுமே
ஆரம்பித்த மாபெரும் வரவேற்பு

பசுமை பொங்கி
பாருக்கே உணவூட்டியவர்கள் நாங்கள்
விருந்துபசாரத்தில்
எம்மை வென்று விட்ட
உறவுகள் அவர்கள்

அருந்தும் தேநீர் நித்தம்
அளவது கடந்தால் பித்தம்
உணவோ நோயைத்தீர்க்கும்
இன்னும் எத்தனையோ சொல்ல

அலைந்து வரும் அலைகளில்
மிதந்து வரும் கானங்களைக்
கேட்டபடி அதிகாலை
மெரீனா கடற் கரையில்
மெலிதான உடற் பயிற்சி

கண்களில் பல கனவுகள்
கண்ணாமுச்சி ஆட
சென்னைப் பல்கலைக் கழகத்தில்
ஜந்து நாள் புத்தாக்கப் பயிற்சி
இல்லை இல்லை யார் சொன்னது
புதினைந்து நாட்களுமே எமக்கு
புத்தாக்கப் பயிற்சிதான்

தினம் தினம்
காலை நேரத்துக்காய்
கண்விழிக்கத் தொடங்கினோம்
அந்த இனிய நாட்கள்
நகர்வதற்காய் எமக்காகவே
மாலையும் கண்விழிக்கத் தொடங்கியது

நாற்பத்தொரு விரிவுரைகள்
இடைவேளை ஏதுமில்லாமல் தொடர்ந்தன
இடையிடையே கண்சிமிட்டும் கண்மணிகள்
பசிவரப் புசிக்கவும்
சில மணிநேரம்
துயிலவும் தான்
நரம் ஒதுக்கப்பட்டது

விரிவுரைகள் எல்லாம்
விவாத மேடைகளானது
வார்த்தைகள் எல்லாம்
பொலபொலவென பொழிந்தன
எம் நாட்டவர் தொடர்பாக
எழுப்பிய கேள்விகள்
கூறிய பதில்கள்
அந்த நிமிடம்
எம்மவர்கள் மறைந்த கணத்தை
எப்படித்தான் மறக்க முடியும்
கேள்விகள் எழுப்பிய
நிசப்தமான அந்தப்பொழுது
சப்த மாகியது

சென்ற முதல் நாள்
குப்பத்தில் ஆய்வெடுக்க
குழுக்களாகப் புறப்பட்டோம்
நிமிடங்கள் வருடங்களாகியும்
மன நிம்மதிக்கு மட்டும்
வினாடிகள் கூட மாற்றமில்லை
என்றேங்கும் குப்பத்து மக்கள்
சென்ற மறுகணமே
மெய் சிலிர்த்த காட்சிகள்
ஏன் இவ்வாறு என்று
பல யோசனைகள்
எம்முன் வந்து போனது
சென்னை மாணவர்களுடன்  
வடக்கு வானில்
பெங்களுர் பயணம்

தந்தை போல் அறிவுரைகளைக்
கூறாமல் கூறி வழி அனுப்பிய
ரவீந்திரன் ஆசிரியர்
நீங்கள் அனைவரும்
சிறு குழந்தையல்ல
புத்தி சொல்லி வழி அனுப்ப
புரிந்து கொள்ளுங்கள் என்பார்

தினம் தினம் எம்மை
தொல்லைப்படுத்தும்எதிர்பார்ப்புக்கள்
திரைப்படம் பார்க்கும் முன்
திரை விமர்சனம் போல் போகும் இடத்தை
விமர்சனம் செய்யும் 
தந்தை ரவீந்திரன் ஆசிரியரின்
தொலை பேசி அழைப்புக்கள்

மூன்று, முப்பது, முன்நூறு
என்று அதிகரிக்கும்  
ASSIGNAMENT கள்
சென்னை மாணவன் மனதில்
ஓடும் எண்ணங்களை   
இரண்டாயிரத்து ஜந்நூறு வரிகளில்
வரையும் ஓவியம் என
தூக்கம் தொலைத்தோம்

நான் யார்?
நீ யார்? என்று
எமக்குள் தான் எவ்வளவு சந்தேகம்
தமிழ்ச்சங்கம் சென்றதை 
எந்தத் தமிழனும் 
மறுக்க" மறக்க மாட்டான்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு
சென்றதை மறக்க முடியுமா



அழிந்து வரும் கலைகளை

அழியவிடாது அரங்கேற்றும்
முற்றத்து நாடகம்
எப்பவுமே ஒரு முன்னோடிதான்


சுற்றுப்புறச் சூழலில்
பத்திரிகைகள் தொடர்பாக
கொயம்பத்தூர் பாரதியார்
பல்கலைக் கழகத்தில்
சிறு கலந்துரையாடல்




சிறு நொடியினை வீணடித்தாலும்

பூதமாய் அல்லல் வருமே  
வீணடிக்க எவரும் விரும்பதில்லை 

இயற்கையின் மிகையை
வெளிப்படுத்திய ஊட்டி
காட்டு மரங்கள் கவி பாட
காட்டின் நடுவே ஒரு    பாதை
சேரி மக்களை சந்திக்க
எம்மவர்கள் புறப்பட
மழை மாலை மலர்கள் தூவ  
கண் மூடித் திறக்கும் முன்
மனதிலே பல
பட்டாம் பூச்சிகள் பறக்க
மகிழ்வுடனே எம் மனதும் 
சென்ற நோக்கம் மாறாமல் பயணிக்க  
அந்த இனிய நாட்கள்
நிமிடங்களாகின
அயல்நாட்டில் தீபாவளி 
தித்திப்பானது ஒரு புறம்

வரலாற்றில் பதிந்த ஆலயங்கள்
எம் மனதைப்பாதித்த சிற்பங்கள்
நினைவுகளை வருடிய நாட்கள்
சேரி மக்களை சந்தித்த சில நொடி
ஊட்டி மக்களை சந்தித்த சில விநாடி
முற்றத்து கலைக்கோயில்
அலுப்பில்லாத அரங்கேற்றம்
இவ்வாறு பதினைந்து நாட்களும்
பறந்து திரிந்த பறவைகள் நாங்கள்

பாடும் பறவைகள் தேடும் உறவுகள்
நாடும் நம் சொந்தங்களை
விட்டுப் பிரிகிறோம்
என்றெண்ணும் போது
வேதாளம் மீண்டும் முருங்கையில்
கை கொட்டிச்சிரிக்க  
பிரிவு என்ற எண்ணத்தில்
இவையனைத்தும்
எம்மனதை வருத்தி விட்டது

இந்திய விமான நிலையத்தில்
போய் வாறன் என்ற
வார்த்தை கூட கூறமுடியாமல்
பல மனங்கள் புறப்பட
எஞ்சிய மனங்கள் கூறிய
தடுமாற்ற வார்த்தைகளுடன்
விடை பெற்றோம்
எம் நாட்டிற்கு

என்தன் தேசத்து
பரவைக்கடல்களும்
வயல்வெளிகளும்
பழகிய நன்பர்களும்
குடும்ப உறவுகளும் என்று
பல நினைவுகள் வட்டமிட
எல்லாவற்றிற்கும் மேலாக   
என்னருமைத் தாய் மண்ணே
நீ எப்படி இருக்கின்றாய்……….    























No comments:

Post a Comment

Welcome Graphic #94