Social Icons

சிறு பூவாய் மிதக்கிறது…………….


கடற்கரைக்காற்று கதைபேச  
சலசலத்து அலையடிக்கும்
ஆற்றின் கரையமர்ந்து
கதை பேசுகிறேன்
கண்களால் அளந்த படி
தளதளக்கும் நீர்ப்பரப்பை
தகதகக்கும் வான்பரப்பை
தவிட்டின் நிறத்தில்
கழுத்தில் சுற்றிய
வெள்ளைப்பட்டுடன்
மிதந்து வட்டமிடும்
வாவைத்தொடரும்
என் பார்வைகள்
ஒன்றையொன்று தொட்டு மீள்கையில்
என் மனதும்
அதில் சிறு பூவாய்
மிதக்கிறது…………….


No comments:

Post a Comment

Welcome Graphic #94