skip to main |
skip to sidebar
மறதி
சலங்கை கட்டியதும்
மேடையேறி
முன் இருப்பவர்களை
ஓரக்கண்ணால்
பார்த்தால் போதும்
ஒத்திகை பார்த்தது
மறந்தே போகும்
தனியாக ஏறிவிட்டால்
சமாளித்துக்கொள்வேன்
பல பேர் ஒன்றாக ஏறிவிட்டால்
சில சமயம்
சிலையாய்
நின்று விடுவேன்
மறதி என் கூட பிறந்த
பாவத்தால்……….
No comments:
Post a Comment