Social Icons

எப்போது காதல் வந்தது

நீ என்னிடம் காதலைச்சொன்ன போது 
என் கோபத்தில் 
உன்மேல் எனக்கு காதல் வந்திருக்க வேண்டும் 
என் திமிரை நீ ரசித்த போது 
எனக்கு உன் மேல் காதல் வந்திருக்க வேண்டும் 
உன்னுடன் போடும் போட்டிகளில் நீ 
தோற்றபோது இல்லை இல்லை என்னை 
ஜெயிக்க வைத்த போது 
உன்மேல் எனக்கு காதல் வந்திருக்க வேண்டும் 
எனக்கு வெறுப்பேற்றவென என் தோழிகளுடன் நீ 
அரட்டையடித்தபோது 
உன் மேல் எனக்கு காதல் வந்திருக்க வேண்டும் 
தோழிகளின் காதலை நீ ஏற்க முடியாமல் என்னிடம் 
மன்னிப்பு கேட்க தவித்த போது 
உன் மேல் எனக்கு காதல் வந்திருக்க வேண்டும் 
உனக்கு பிடித்தவற்றை நான் வெறுத்த போது 
உன் கண்ணீரில் எனக்கு 
காதல் வந்திருக்க வேண்டும்
எனக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக 
உனக்கு பிடித்தவற்றை பிடிக்கவில்லை என்றபோது 
எனக்கு உன்மேல் காதல் வந்திருக்க வேண்டும் 
இதுதான் காதல் என்று 
புரியாமல் போனதே 
இன்று என் வேதனை

No comments:

Post a Comment

Welcome Graphic #94