அஸ்தமித்த சூரியன்
அரங்கிற்கு வரும் முன்னே
அவனுக்கென்ன
அவளுக்குத்தான் குடுத்து வைக்கல்ல
ஊர்க்குருவிகளின் வார்த்தைகளில்
புதுப்புது வலி பிறக்கிறது
வார்த்தைகள்கூட காயப்படுத்தி
முன்னே செல்ல வழி சொல்லும் ஆனால்

பாரதி கண்ணம்மாவுக்கு கூட
கற்றுக்கொடுக்கவில்லை.
அப்படியே யாரும் சொல்லிவிட்டால்
அதிலும் அந்நியனாய்பபோவோம்
இதில் சாமத்தின் பிடியில் இருந்து
தப்பும் தந்திரம் என் தாய்
எனக்கழித்த சுதந்திரம் தான்
இறந்துபோன நினைவுகள்
இமைகளை நனைக்கையில்
மறக்க நினைப்பவைகளெல்லாம்
கடும் சித்திரவதைகளே
துளைத்தெடுக்கும் பார்வைகளது
துருவக்குரலில் மேலும் மேலும்
துளைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
துருப்பிடித்த மனதுக்கு
துடிக்கும் இதயம் தூங்கிவிட்டதாம்
வெறும் ஜடமாய் காட்சிக்கு மட்டும்
மயக்கப்பட்டுள்ள ஆடவர் நாம்
எம் குளிர்கால
ஒன்றிரண்டு நினைவுகள் கொண்டு
மனதோடு மட்டும்
பல கதை பேசி பயணிக்கும்
ஆண் மனதை அறிய
யாரால் முடியும்?
No comments:
Post a Comment