அழகான ராச்சசி
அன்று தான்
கண்டேன் அவளை
அழகின் அரசியவள்
அகங்காரத்துடன் புண்ணகைத்தாள்
ஊருக்கும் புதுசு
வீட்டுக்கும் புதுசு
என்பது தான்
எனது கற்பனை
அயல் வீட்டாரை மட்டுமல்ல
ஆணவம் பிடித்தவர்களையும்
ரசிக்கவைக்கும்
இதழ்கள் கொண்டவள்
அவளைத் தாண்டிச் செல்வோரை
சிறைப்படுத்தி விடுவாள்
இதனை அவள்
காதலன் அறிந்தால்
அடுத்த போர்
ஆரம்பமாகிவிடுமோ என்னமோ
அன்றொரு நாள்
அவள் வீட்டு வாசலை
எட்டி எட்டி பார்த்தேன்
அவளைக் காணவில்லை
இறைவனின் பாதத்தில்
பல பூக்களுக்கு தலைவியாய்
பூத்திருந்தால்
புது றோஜாப்பூவாக
Subscribe to:
Post Comments (Atom)





Colombo Time


No comments:
Post a Comment