காதலைச் சொன்ன போது உன்
தோள் சாய்ந்தேன்
ஆதரவு தந்தாய்
பிறர் பாராட்ட உன்
தோள் சாய்ந்ததேன்

நம் காதலை உறவுகள்
ஏற்றுக்கொண்டதும் உன்
தோள் சாய்ந்தேன் இது
ஆரம்பமல்ல என்றாய்
திருமணத்தின் போது உன்
தோள் சாய்ந்தேன்
அடைக்கலம் தந்தாய்
வாழ்வின் எல்லை வரை உன்
தோள் சாய்ந்தேன்
வெறுக்கவில்லை
அனைத்துக் கொண்டாய்
காதல் என்றால் பலர்
பலதுகள் சொன்னார்கள்
அதெல்லாம் பொய் என்று
நாம் உரைப்போமா?
No comments:
Post a Comment